Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சினிமாவை கடுமையாக விமர்சித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!! 

சினிமா என்றாலே அதில் பொய், வஞ்சகம், ஏமாற்றம், பழிவாங்கல், கிசுகிசுக்கள் போன்றவை நிறைந்திருப்பது தான் என்று சினிமாவை கடுமையாக சாடிய நடிகை தனுஶ்ரீ தத்தா பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இவர் தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் ஒரு கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெரிதும் பிரபலமானார். அண்மையில் பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு நெபோடிசம் பற்றிய பேச்சு, பாலிவுட்டில் காரசாரமாக நடந்து வருகிறது.

இவர் தனது முதல் படத்திலிருந்தே சினிமாவில் நடைபெறும் மோசமான செயல்களை பார்த்து வருகிறேன் என்றும் னிப்பட்ட முறையில் எனக்குப் பிடிக்காத வர்களோ என்னைப் பழிவாங்க இதை செய்தார்கள். என்னைப் பற்றிய தவறான செய்திகளை பரப்பினார்கள்.

புதிதாக சினிமாவில் அறிமுகமாக வருபவர்கள் சில விஷயங்களுக்கு உடன்படவில்லை என்றால், ‘அவங்க அணுகுமுறை சரியில்லையே’ என்று முத்திரை குத்தி விடுவார்கள்.

பிரபலங்கள் வாரிசுகளுக்கு  சினிமாவுக்கு வரும் முன்பே எல்லாம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அவர்கள் வாழும் சூழல் அப்படி. அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. 

வழிகாட்டிகளும் ஆலோசகர்களும் அவர்களுக்கு இருக்கிறார்கள். ஆனால், அவுட்சைடர்களுக்கு இது புதிய பிரதேசம் போன்றுதான் இருக்கும். இவ்வாறு நடிகை தனுஶ்ரீ தத்தா கூறியுள்ளார். இப்படி சினிமாவை பற்றி மனம் திறந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

 

Exit mobile version