கலைஞர் உடனான நினைவுகளை பகிர்ந்த பிரபல இயக்குநர் !!

0
122
#image_title

கலைஞர் உடனான நினைவுகளை பகிர்ந்த பிரபல இயக்குநர்

முன்னாள் முதல்வரும், தமிழ் இலக்கிய எழுத்தாளருமான கவிஞர் கருணாநிதி அவர்கள் உடனான நினைவுகளை பிரபல ஒலிப்பதிவாரும், இயக்குநருமான தங்கர் பச்சான் அவர்கள் பகிர்ந்து உள்ளார்.

1999 ஆம் ஆண்டு இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள் எழுதி வெளியிடப்பட்ட நாவலான “ஒன்பது ரூபாய் நோட்டு” சிறந்த படைப்புக்கான மாநில அரசு விருது வென்றது. அப்போதைய முதல்வரான கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல் முறையாக இலக்கியத்திற்காக மிகப்பெரிய விருதை இயக்குநர் தங்கர் பச்சான் அவர்கள் பெற்றார்.

346 பக்கங்கள் கொண்ட அந்த நாவலை முதலமைச்சராக பொறுப்பு வகிக்கும் கலைஞர் கருணாநிதி அவர்கள் முழுவதும் படித்து என்னை பாராட்டினார் என்று இயக்குனர் தங்கர்பச்சான் அவர்களே பெருமிதம் தெரிவித்துள்ளார்.

“காதல் கோட்டை” படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவதற்கான தமிழக அரசின் விருது, சிறந்த பதிப்பாளருக்கான விருது கலைமாமணி விருது என 9 விருதுகள் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் தங்கர் பச்சன் அவர்கள் பெற்றுள்ளார்.

2007 ஆம் ஆண்டு வெளியான “பள்ளிக்கூடம்” படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்கிய தங்கர்பச்சான் அவர்களை கலைஞர் கருணாநிதி அவர்கள் நேரில் அழைத்து பாராட்டிய அப்போது சினிமா வட்டாரங்களில் பெரிதும் பேசப்பட்டது.

கலைஞர் கருணாநிதி அவர்கள் சிறந்த படைப்பாளர்களை நேரில் அறிவித்து பாராட்டுவதும், அவர்களுக்கு பரிசு வழங்குவதும் விருதுகளை அறிவிப்பதும் வழக்கமாகக் கொண்டவர். சிறந்த திறமையாளர்களை அவர் எப்போதும் அங்கீகரிப்பார் என்றும் இன்றளவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. தற்போதைய முதல்வராக இருக்க கூடிய ஸ்டாலின் அவர்களும் தன் தந்தையின் பாணியை பின்பற்ற வேண்டும் என எழுத்தாளர்களும், திரை கலைஞர்களும் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.