நாளொன்றுக்கு 200 சிகரெட்களுக்கு பக்கமாக ஊதி தள்ளிய பிரபல இயக்குனர்! நிகழ்ச்சியில் அவரே மனம் திறந்த தகவல்!

0
179
The famous director who blew 200 cigarettes a day! He opened his heart in the program!

நாளொன்றுக்கு 200 சிகரெட்களுக்கு பக்கமாக ஊதி தள்ளிய பிரபல இயக்குனர்! நிகழ்ச்சியில் அவரே மனம் திறந்த தகவல்!

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் திரையில் முதலில் பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாக படம் பிடித்து காட்டினார். அந்தப் படம் மிகுந்த பாராட்டுகளை பெற்றது. மேலும் இவர் அடுத்ததாக ஆடுகளம் படத்தை இயக்கினார்.2011 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதுகளை பெற்று தந்தது.

மேலும் இவர் விசாரணை, வடசென்னை, அசுரன், பாவகதைகள் போன்ற திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழுவினர் கடைசி நாள் சூட்டிங் போட்டோ வெளியிட்டு அறிவித்தனர். மேலும் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றிமாறன் உடற்பயிற்சி கூடம் சென்று ஒர்க் அவுட் செய்வதனால் மட்டும் ஆரோக்கியமாக இருக்க முடியாது.

நம் வாழ்க்கை முறையையும் மாற்ற வேண்டும் என கூறினார். அதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில் நான் காலேஜ் படிக்கும் காலகட்டத்தில் ஒரு நாள் ஒன்றுக்கு 70 சிகரெட் பிடிப்பேன். நான் முதல் படம் எடுத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாளொன்றுக்கு 170 முதல் 180 சிகரெட் களை பிடித்திருப்பேன் என கூறினார்.

இவ்வாறு நான் சிகரெட் பிடிப்பது தவறான விஷயம் என்பதை உணர்ந்த பிறகு மருத்துவர்களின் ஆலோசனைப்படி புகைபிடிக்கும் பழகத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வந்தேன் இனி என்னுடைய திரைப்படங்களில் புகை பிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகள் முடிந்த அளவு தவிர்ப்பேன் என கூறியுள்ளார்.