சினிமா பார்ட்டிகளில் போதை மாத்திரைகள் உட்பட பலபோதைப்பொருட்களை இளம் நடிகர் நடிகைகள் உபயோகப்படுத்துவது கன்னடப் பட இயக்குனரான இந்திரஜித் லங்கேஷ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பெங்களூரில் அண்மையில் அப்பாவியான சமூக ஆர்வலரும், பெண் பத்திரிகையாளரான கவுரி லங்கேசின் என்பவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பல தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவருடைய சகோதரர்கள் இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை விற்பனை செய்த மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் கன்னட டிவி நடிகை அனிகா, கேரளாவைச் சேர்ந்த ரவீந்திரன், அனூப் என கண்டறியப்பட்டது.
இவர்களிடம் இருந்து வெளிநாடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நடிகை விசாரித்தபோது அவர் பல இளம் சினிமா நடிகர் நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்ததாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சினிமா திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தேவைப்பட்டால் இதுகுறித்து தனக்கு தெரிந்த எல்லா தகவல்களையும் கொடுக்கத் தயாராக உள்ளதாக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்திருந்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எனக்கு யாரைக் கண்டும் பயமில்லை இந்த போதை பழக்கத்தினால் அடிமையானவர்களை மீட்டெடுக்கும் எண்ணத்திலும் இனிவரும் இளம் சினிமா தலைமுறைகளை காப்பாற்றும் எண்ணத்திலும் இந்த செயலை செய்து உள்ளேன் என்றார். இதனால் இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் சினிமா பிரபலங்கள் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்,