Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக முதலமைச்சரிடம் பகிரங்கமாக உதவி கேட்கும் பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் இடம் பகிரங்கமாக தனக்கு உதவி தேவை என்பதை எழுத்துவடிவில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் நீர்பறவை, தர்மதுரை மற்றும் தென்மேற்கு பருவக்காற்று போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

இவரின் திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் மாமனிதன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இயக்குனர் சீனு ராமசாமி அவ்வபோது சமூக கருத்துக்களை கூறி வருபவர். தற்போது இவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்வதாகவும் அதிலிருந்து தன்னை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு தெரிவித்துள்ளார். அதாவது இயக்குனர் சாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் : 

“எனக்கு ஆபத்து இருப்பதாக உணருகிறேன். முதலமைச்சர் அய்யா அவர்கள் உதவ வேண்டும், அவசரம்” இவ்வாறு பதிவிட்டிருந்தார். அதுமட்டுமன்றி அவர் சில ஆடியோ பதிவுகளையும் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் எந்த கட்சிக்கும் எதிராக அவர் எந்தவிதமான கருத்துக்களையும் முன்வைக்க போவதில்லை என்றும் தமிழர்களுக்கு ஆதரவு அளித்து அவர் செய்த நிலைபாடுகள் குறித்தும் அதை எதிர்த்து எதிர்வினைகள் செய்யப்பட்டதை குறித்தும்  தெளிவுபடுத்த போவதாக கூறியுள்ளார். 

மேலும் அவர் தனது இன்னொரு ஆடியோவில், அவர் செய்தியாளர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தனது இல்லத்தின் முகவரியையும் கூறியுள்ளார்.

Exit mobile version