உச்சத்தில் உள்ள தக்காளி விலையால் உச்சம் பெற்ற விவசாயி!! அதுவும் ஒரே மாதத்தில் சாதனை!!
தொடர்ந்து தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருவதால் விவசாயி ஒருவர் கொள்ளை லாபம் அடைந்துள்ளார்.
தற்போது நாடு முழுவதிலும் கடும் அதிர்வலைகள் ஏற்படுத்திய பிரச்சனை என்றால் அது தக்காளி விலை உயர்வு தான். நாடு முழுவதிலுமே தக்காளி விலையானது உச்சத்தில் தான் உள்ளது. பல மக்கள் சமையலுக்கு தக்காளி பயன்படுத்துவதையே மறந்து விட்டனர். ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு தற்போது தக்காளி விற்பனை சென்று கொண்டுள்ளது என்பதில் மிகையில்லை.
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒருகிலோ தக்காளி இன்றைய நிலவரப்படி ரூ. 140க்கு விற்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளில் ஒரு கிலோ ரூ.100 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. பல மக்கள் தக்காளி வாங்கியே ஏழையாக மாறி விடுவர் என்ற சூழ்நிலை நிலவி கொண்டிருக்கையில் தக்காளி விவசாயம் செய்து ஒருவர் ஒரே மாதத்தில் கோடி ரூபாய் வருமானம் பார்த்த நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம் நாராயண்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் துகாராம் பஹொஜி கெய்கர். இவர் தனக்கு சொந்தமான 18 ஏக்கர் விவசாய நிலத்தில் 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி விவசாயம் செய்து வருகிறார். இவருடன் கூடவே அவரின் மகன் ஈஸ்வர் மற்றும் மருமகள் சோனாலி ஆகியோர் இணைந்து விவசாயம் தக்காளி விவசாயத்தில் உதவி செய்து வருகின்றனர்.
போதிய உரம்,பயன்படுத்தி பூச்சி,புழுக்கள் பாதிப்பு இல்லாததால் தக்காளி நன்கு விளைச்சலை கொடுத்து வருகிறது. தற்போது ரூ.100க்கு மேல் விற்கும் சூழலில் துக்காராம் குடும்பத்திற்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் துக்காராம் 13 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனை செய்து ஒரு பெட்டி சராசரியாக 1000 முதல் 2400 வரை விற்பனை செய்ததில் ஒரு மாதத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய், வருமானம் ஈட்டிள்ளனர்.
அதிலும் நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு பெட்டி கிரேட்-20 கிலோ தக்காளி 2100 வீதம் 900 பெட்டிகள் விற்பனை செய்து 18 லட்ச ரூபாய் ஈட்டியுள்ளார். துக்காராம் போன்று கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஒரு விவசாய குடும்பம் 2000 தக்காளி பெட்டிகளை சந்தையில் விற்பனை செய்து 38 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.