எடப்பாடியார் ராசிக்காரர்! இவரால்தான் அணைகள் நிரம்பியது! விவசாயிகளின் ஹீரோ! எடப்பாடியாருக்கு விவசாயிகளின் ஓட்டு நிச்சயம்
கடந்த மாதம் பெய்த தென்மேற்கு பருவக்காற்று மழையால் தமிழ்நாட்டில் பல்வேறு அணைகள் நிரம்பி,விவசாயத்திற்காக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பவானிசாகர் அணையின் உபரி நீரும், மேட்டூர் அணையின் உபரி நீரும் திறக்கப்பட்டடு,ஈரோடு திருப்பூர் கரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு இந்த தண்ணீரானது விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்குகின்றது.இதனால் விவசாயத்திற்கு டிசம்பர் வரை நீர் கவலை இல்லை என்று விவசாயிகள் தெரிவிப்பதாக செய்திகள் கூறுகின்றன.
மேலும் விவசாய மக்கள் இதுகுறித்து கூறியவாறு :
இதற்கு முழு காரணம் முதலமைச்சர் பழனிசாமி தான் என்றும்,இவரது ராசியால்தான் அணைகள் அனைத்தும் நிரம்பி விவசாயங்கள் செல்கின்றன| என்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.இதேபோல் தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் மூலம் கடமடைக்கு நீர் சென்றுள்ளது.இதனால் இந்த ஆண்டு முழுவதும் வேளாண் பணிகளுக்கு எந்தவித தண்ணீர் தட்டுப்பாடும் இருக்காது என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதனால் எடப்பாடியை ராசியான முதல்வர் என்று விவசாயிகள் பெருமிதம் கொள்கின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாய மக்களை பூரிப்படைய வைத்தார். அதேபோல் விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றதால் விவசாயிகளிடையே,எடப்பாடி ஹீரோவாக திகழ்கிறார். விவசாயிகளை பற்றி கவலை கொள்ளும் முதலமைச்சருக்கு அவர்களின் வாக்கு நிச்சயம் என்பதில் எந்த மாற்றமுமில்லை என்று மக்கள் நெகிழ்ச்சியில் கூறியுள்ளனர்.