Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடல் சதையில் ஒட்டியுள்ள கொழுப்பு பனி போல் உருகும்.. கற்றாழை ஜூஸை இப்படி செய்து பருகினால்!!

நமது உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் தேங்கி இருந்தால் அவை பல நோய்களுக்கு பாதை வழிவகுத்துவிடும்.எனவே உடலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கற்றாழை ஜூஸ் செய்முறையை பின்பற்றி பலன் பெறுங்கள்.

உடலில் கெட்ட கொழுப்பு சேர காரணங்கள்:-

*கொழுப்பு உணவுகள்
*ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்
*சோம்பேறி வாழ்க்கை முறை
*உடல் நலக் கோளாறு

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் கற்றாழை ஜூஸ்:

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை மடல் – ஒன்று
2)இஞ்சி துண்டு – ஒன்று
3)எலுமிச்சை – ஒன்று
4)இந்துப்பு – சிறிதளவு
5)சீர்கத் தூள் – கால் தேக்கரண்டி
6)சியா விதைகள் – ஒரு தேக்கரண்டி
7)சாட் மசாலா – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அதன் பின்னர் கற்றாழை ஜெல்லை மட்டும் பிரித்து ஒரு கிண்ணத்தில் போட்டு 5 அல்லது 6 முறை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.

**அடுத்து ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

**இதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி சியா விதைகளை தண்ணீர் போட்டு நன்றாக ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

**இப்பொழுது மிக்சர் ஜார் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.அடுத்து கற்றாழை ஜெல்,இஞ்சி துண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அதன் பிறகு சிறிதளவு இந்துப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து இந்த ஜூஸை கிளாஸிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு ஊறவைத்த சியா விதைகளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

**அடுத்து அதில் சாட் மசாலா சேர்த்து கலந்து விட வேண்டும்.அதன் பிறகு எலுமிச்சம் பழத்தை கட் செய்து அதன் சாறை கற்றாழை ஜூஸில் பிழிந்துவிட வேண்டும்.

**இப்படி கற்றாழை ஜூஸ் செய்தால் அவை கசப்பு சுவையாக இருக்காது.இந்த மாதிரி கற்றாழை ஜூஸ் செய்தால் அனைவரும் விரும்பி பருகுவார்கள்.

Exit mobile version