Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிர்ச்சி: மனைவியின் மீதுள்ள கோபத்தால் தனது 8 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை!!

அதிர்ச்சி: மனைவியின் மீதுள்ள கோபத்தால் தனது 8 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மனைவி மீதுள்ள கோபத்தால் 8 மாத குழந்தையை சாகும்வரை குழந்தையின் தந்தையே கொடூரமான முறையில் தரையில் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

உத்திரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில், மண்டவாலி மண்டல காவல் நிலையப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் வாழ்ந்து வருபவர் தான் முஹம்மது நாஜிம். இவர் ரஹத்புர் குர்க் கிராமத்தைச் சேர்ந்த மஹ்தப் ஜஹானை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தையும் இருந்தது. இந்த நிலையில், தம்பதியருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, மஹ்தாப் தனது கணவரின் வீட்டை விட்டு சில நாட்களுக்கு முன்பு தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று வசிக்கத் தொடங்கினார்.

இதனை தொடர்ந்து ஜூலை 31 ஆம் தேதி இரவு குடிபோதையில் இருந்த நாஜிம், தனது மனைவியின் பெற்றோரின் வீட்டிற்கு சென்ற தனது மகளை தன்னுடன் திருப்பி அனுப்புமாறு கேட்டு இருக்கின்றார். இதனை அடுத்து மீண்டும் அந்த தம்பத்தியினருக்கு சண்டை வந்துள்ளளது.

திடீரென ஆத்திரம் அடைந்த நாஜிம் தனது மகளை அழைத்துவந்து, குழந்தை இறக்கும் வரை மீண்டும் மீண்டும் தரையில் அடித்து இருக்கின்றார். இதனை அடுத்து மஹ்தாப் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், மருத்துவர்கள் குழந்தை முன்பே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதனையடுத்து ஆகஸ்டு 1ஆம் தேதி நாஜிமை கைது செய்ய கோரி மஹ்தாப் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாஜிம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று பிஜ்னோர் காவல் கண்காணிப்பாளர் தரம்வீர் சிங் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version