Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மகனையே குத்திக் கொன்ற தந்தை! தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்!

The father stabbed his son to death! The incident in Thanjavur!

The father stabbed his son to death! The incident in Thanjavur!

 

மகனையே குத்திக் கொன்ற தந்தை! தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி மேட்டுக்கொல்லை  கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (58) இவர் விவசாயி. இவருடைய மனைவி நிர்மலா இவர்களுக்கு  ஒரே  மகன் அவர் பெயர்  மார்க்டிக்சன்(27). மார்க்டிக்சன்னும் அவரது  தாயும் தஞ்சையில் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் தஞ்சையில் இருந்து துவரங்குறிச்சிக்கு வந்த மார்க்டிக்சன் தனது தந்தை சந்திரகுமாரிடம் நீங்கள் வைத்திருக்கும் சொத்துக்களில் எனக்கு பங்குண்டு அதனை பிரித்து தருமாறு கேட்டார். இதனால் தந்தை மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது சிறிது நேரத்தில் அந்த வாக்குவாதமானது கைகலப்பாக மாறியது.அதில்  ஆத்திரமடைந்த சந்திரகுமார் கத்தியை எடுத்து மகன் மார்க்டிக்சனை குத்தினார்.

மேலும்  கோபம் தீராமல் மண்வெட்டியால் அவரை தாக்கினார் எனவும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.  இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மார்க்டிக்சனை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அவரது தாய் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மார்க்டிக்சன் நேற்று காலை இறந்தார். இது குறித்து பட்டுக்கோட்டை போலீசாரிடம் மார்க்டிக்சன் தாய் நிர்மலா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version