Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விடாது அழுதுகொண்டிருந்த 4 வயது குழந்தையை கொலை செய்த தந்தை !! பின்னர் நேர்ந்த கொடூரம் :!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் குழந்தை அழுது கொண்டிருந்ததினால் ஆத்திரமடைந்த தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் , காஜியாபாத் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான வாசுதேவ் குப்தா என்பவருக்கு , நான்கு வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் , மனைவி, மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த வாரம் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் வாசுதேவ் குப்தாவின் மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார் .இதனைத் தொடர்ந்து அவரது பிள்ளைகளுடன் தந்தை தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று 4 வயது மகள் விடாது அழுது கொண்டிருந்தாள். வாசுதேவ் குப்தா என்பவர், எவ்வளவு சமாதானம் கூறியும் அந்த குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.பின்பு தனது மகளின் சடலத்தை எடுத்துக்கொண்டு மனைவியை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் மனைவி எங்கு தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை.மேலும் வாசுதேவ் ,தனது மகளின் சடலத்தை அவர் வேலை செய்யும் ஷாப் அருகே வீசிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் வாசுதேவின் தம்பி ரவி என்பவர், வீட்டிற்கு வந்த போது யாரும் இல்லாததால் அதிர்ச்சியடைந்து அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தந்தை மகளை கொலை செய்த சம்பவம் தெரியவந்தது. மேலும் வாசுதேவ் குப்தாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version