Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மகள் உயிரோடு இருக்கும்பொழுதே மகளுக்கு கண்ணீர் அஞ்சலி ஓட்டிய தந்தை! 

மகள் உயிரோடு இருக்கும்பொழுதே மகளுக்கு கண்ணீர் அஞ்சலி ஓட்டிய தந்தை!

மகள் காதல் திருமணம் செய்து கொண்டதனால் தாங்க முடியாத தந்தை, மகள் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டையை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் மற்றும் செல்வி.குடும்பத்துடன் இவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார் அவர் பெயர் கீர்த்தனா.

மகள் கீர்த்தனாவின் திருமணத்திற்காக சொந்த ஊரான தேனி மாவட்டத்திலுள்ள வேப்பம்பட்டை கிராமத்திற்கு வந்துள்ளனர். அதேபோல் தேனியில் உள்ள பண்ணைபுரத்தை சேர்ந்த ஒருவரை மணமகனாக தேர்வு செய்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.

திருமணத்திற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்துள்ள நிலையில் பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு நகை மற்றும் பொருட்களை வாங்கி குவிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை அன்று திருமணம் என்று கூறி உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து அழைத்துள்ளனர்.

அப்பொழுது கீர்த்தனா கடந்த சனிக்கிழமை அன்று வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் என்று கூறி வெளியில் புறப்பட்ட கீர்த்தனா வீடு திரும்பவில்லை.

வெகு நேரம் ஆனதும் கீர்த்தனா வீடு திரும்பாததை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியுற்று அக்கம் பக்கம் எல்லாம் தேடியுள்ளனர். அப்போதுதான் கீர்த்தனா வேறு ஒருவருடன் சென்றுவிட்டார் என உண்மை தெரியவந்துள்ளது.

இதனால் மனமுடைந்த ஜெயபால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பெயரில் போலீஸார் கீர்த்தனாவையும் கீர்த்தனாவை அழைத்து சென்ற அந்த நபரையும் விசாரிக்கும் பொழுது இருவரும் திருமணம் செய்து கொண்டதாக அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால் தனது மகள் இறந்து விட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒன்றை சொந்த ஊர் முழுவதும் ஓட்டியுள்ளார். மகள் உயிருடன் இருக்கும் பொழுதே அகாலமரணம் அடைந்தார் என கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஓட்டியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version