Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பச்சைக் கிளி தந்த பயம்..கடலூரில் பாமகவை கண்டு அஞ்சுகிறதா திமுக!!

the-fear-of-the-green-parrot-is-dmk-afraid-of-seeing-bamagawa-in-cuddalore

the-fear-of-the-green-parrot-is-dmk-afraid-of-seeing-bamagawa-in-cuddalore

பச்சைக் கிளி தந்த பயம்..கடலூரில் பாமகவை கண்டு அஞ்சுகிறதா திமுக!!

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த விவகாரத்தில் வனத்துறை ஏன் இவ்வளவு கறார் நடவடிக்கை காட்டுகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள இயக்குநர் தங்கர் பச்சான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். முதலில் இந்த தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.கோவிந்த சாமியை நிறுத்த முயற்சித்தனர்.‌ அவர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால்தான்  வெளிநாட்டிலிருந்த தங்கர்பச்சானை தொடர்பு கொண்டு கடலூர் வேட்பாளராக களமிறக்கினார் அன்புமணி.

திரைத்துறையில் மட்டுமின்றி கடலூர் சுற்றுப்பகுதிகளிலும் தங்கர் பச்சானுக்கு நல்ல பெயர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தான் அண்மையில் பிரச்சாரத்தின்போது இவர் கிளி ஜோசியம் பார்த்தார். தேர்தலில் வெற்றி பெறுவேனா? என்று ஜோசியம் கேட்கவே, அதற்கு ஜோசியம் பார்ப்பவர், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சொன்னார்.

இதுதொடர்பான வீடியோவும் வைரலான நிலையில் உஷாரான வனத்துறை சட்டப்படி வன உயிரினங்களை கூண்டில் அடைத்து ஜோசியம் பார்ப்பது தவறு எனக்கூறி ஜோசியர் செல்வராஜை கைது செய்தது. வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. கிளி ஜோசியம் பார்த்தவரை கைது செய்தது நியாயமில்லை. அதுவும் தங்கர் பச்சானை குறிவைத்து தான் இந்த கைது நடவடிக்கை நடந்ததாகவும் பாமகவினர் குற்றம்சாட்டுகின்றனர்‌.

இந்த பிரச்சனையை உண்டாக்கி வனத்துறையை தங்கர் பச்சானுக்கு எதிராக திருப்பி விட்டதே திமுகவினர் தான் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.சட்டம் இப்படி இருந்தாலும் திடீரென அவருக்கு ஜோசியம் பார்த்தவரை மட்டும் கைது செய்தது ஏன்? அதே மாதிரி அவர் கைது செய்யப்பட்ட வீடியோவை வைத்து பார்க்கையில் இது அவ்வளவு பெரிய குற்றமா? கஞ்சா கடத்தியவர்களை ராஜா மாதிரி நடத்தும் நம் நாட்டில் கிளி ஜோசியம் பார்த்தவரை பெரிய குற்றவாளி போல கைது செய்யப்பட்ட விதம் சரியா? உள்ளிட்ட கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுகின்றன. தங்கர் பச்சானுக்கு கடலூரில் இருக்கும் செல்வாக்கை பார்த்துவிட்டு திமுக அச்சத்தில் உள்ளதாகவும் பாமகவினர் கடுமையாக குற்றம்சாட்டுகின்றனர்.

Exit mobile version