மாணவர்களிடம் கூட தன் அலட்சியபோக்கைக் காட்டும் மத்திய அரசு!ஆதாரம் இதோ! 

0
106

கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன.முக்கியமாக தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தீவிரமாக எடுத்து வருகின்றன என்றே கூறலாம்.

இவ்வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன், மடிக்கணினி மற்றும் இணைய வசதிகள் தேவைப்படுகின்றன.ஆனால் பெரும்பாலான மாணவர்களிடம் இந்த வசதி இல்லாததால் அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத காரணத்தினால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் இந்த நாட்டில் அரங்கேறியுள்ளது.மேலும் நீட் ,JEE போன்ற தேர்வுகளில் அழுத்தத்தின் காரணமாகவும் ஏராளமான மாணவர்கள் நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.

இன்று பாராளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி மக்களவையில் டிஜிட்டல் கல்விக்கான வழிமுறைகள் இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட 18 முதல் 30 வயது வரையிலான மாணவர்களின் விவரங்களை சாதிவாரியாகவும் பொருளாதாரத்தில் நலிவடைந்த சமூகத்தினரின் வாரியாகவும் கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய கல்வி அமைச்சகம் இது தொடர்பாக தங்களிடம் எந்த விவரமும் இல்லை என்றும் இந்த தகவல்களை தாங்கள் திரட்ட வில்லை என்றும் பதிலளித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதே தான் குரானா பேரிடர் காலத்தில் நீண்ட பயணங்கள் மேற்கொண்டு உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை வழங்காத போது மத்திய அரசு பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்த நிலையில் தற்போது மாணவர்கள் தற்கொலை தொடர்பான விவரங்களும் தங்களிடம் இல்லை என்று கூறியிருப்பது அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு இந்த தகவல்களை அளிக்க மறுப்பது பாஜக தன்னுடைய பிம்பத்தை பாதுகாக்கும் வழி என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது. இவ்வாறு நாட்டில் நடக்கும் பெரிய பிரச்சனைகளை பற்றி எந்த தகவல்களையும் சேகரிக்காமல் கால் போன போக்கிலேவா ஆட்சியை நடத்துகிறது பாஜக என்று விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.