மத்திய அரசின் நிலையான எதிர்கால சேமிப்பு திட்டம்!  இது முன்னாடியே தெரியாம போச்சு!

0
105

மத்திய அரசின் சிறு சேமிப்பு திட்டமான தேசிய சேமிப்பு சான்றிதழ் என அழைக்கப்படும் NSC என்பது வங்கிகளின் மூலம் பாமர மக்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை நிலையான எதிர்கால சேமிப்பதற்கான சிறப்புத் திட்டம் ஆகும்.

வருமான வரிச் சட்டம் 80-சி பிரிவின் கீழ் இத்திட்டத்தில் குறைந்தது நான்கு ஆண்டுகளுக்கு நிலையான வருமானம் குறைக்கிறது.

அண்மையில் அறிவித்த அறிக்கையின்படி ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இந்த ஆண்டின் காலாண்டு காலத்தில் தேசிய சேமிப்பு சான்றிதழ் 6.8% வருமானத்தை பெறலாம்.

இந்த நிலையான வருமான சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒருவர் 100 ரூபாய்க்கு வங்கி கணக்கை திறக்க முடியும் பின்பு எவ்வளவு வேண்டுமானாலும் அதிகபட்ச வரம்பு இல்லாமல் சேமித்துக் கொள்ளலாம்.

 வங்கிப் புத்தகம் அல்லது இந்த திட்டத்தின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேஜர் ஆனவர்கள் தங்களுக்காக அல்லது மைனராக உள்ளவர்களுக்கும் இந்த  திட்டத்தின் மூலம் வருங்கால சேமிப்பை தொடங்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ் தேவை ஏற்பட்டால் கடன் பெறவும் முடியும். மேலும் அப்போது காலாண்டு அடிப்படையில் அரசாங்கம் வட்டி விகிதத்தை அதிகப்படுத்தவும் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.