வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கிய கல்லறை தொட்ட பணியாளை சற்றும் யோசிக்காமல் தொட்டு தூக்கிய பெண் இன்ஸ்பெக்டர்!

0
150
The female inspector who touched and lifted the tomb worker who had fainted due to epilepsy!

வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கிய கல்லறை தொட்ட பணியாளை சற்றும் யோசிக்காமல் தொட்டு தூக்கிய பெண் இன்ஸ்பெக்டர்!

சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். வயது இருபத்தி எட்டு. இவர் அதே பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாகவும், அவர் அதில் நனைந்தபடியே இருந்ததன் காரணமாகவும் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு, அவர் கல்லறை மீதே மயங்கி விழுந்துள்ளார். இந்த விஷயம் டிபி சத்திரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் இந்த தகவல் அறிந்து விரைந்து வந்தனர்.

அப்போது மயங்கிக் கிடந்த உதயகுமாரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி பார்த்தார். அவர் இன்னும் சாகவில்லை. உயிரோடுதான் உள்ளார் என்று கூறிவிட்டு எவ்வித தயக்கமுமின்றி அவரை அப்படியே அலேக்காக தூக்கி தனது தோள்களில் வைத்து சுமந்து கொண்டு வெளியே வந்தார். அதன் பின்னர் அவரை ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஒருவர் உயிருக்கு போராடும் நேரத்தில் மற்ற போலீஸ்காரர்களை உதவிக்கு அழைக்காமல் நேரடியாக களப்பணியாற்ற இன்ஸ்பெக்டரின் செயலுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் அவரை மிகவும் பாராட்டி உள்ளனர். மேலும் இவர் கொரோனா காலகட்டத்தில் ஓட்டேரி பகுதியில் சாலையோரம் வசித்தவர்களில் உயிரிழந்த ஒரு மூதாட்டியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்ததும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இவரின் இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.