கலைஞருக்கும் சிவாஜிக்கும் நடந்த சண்டை!

0
295
#image_title

சிவாஜி கணேசன் அவர்களின் முதல் படமான பராசக்தி படத்திற்கு கதை வசனம் எழுதியவர் கலைஞர் என்று அனைவருக்கும் தெரியும். அவரது வீரமான வசனங்களை பேசும் சிவாஜி அவருக்கு அந்த படத்தின் மூலம் மாபெரும் வாய்ப்பு கிடைத்தது என்றே கூறலாம்.

 

எம்ஜிஆர் சிவாஜி இரண்டு பேருமே அரசியல் கட்சிகளில் தலையிட கருணாநிதிக்கும் சிவாஜிக்கும் ஒரு சமயம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .

 

திமுகவின் தலைவர் கலைஞர். அப்பொழுது சிவாஜி அவர்கள் காங்கிரசிற்கு பலமாக இருந்தார். அப்படி நெல்லையில் ஒரு சமயம் பேசும் பொழுது திமுக அரசை மக்கள் நாயை அடித்து முச்சந்தியில் வீசுவது போல வீசிவிட்டார்கள் , ஏன் என்று கேட்க நாதியில்லை என்று அவர் சொல்லி இருக்கிறார்.

 

இதனால் கோபமடைந்த திமுக தலைவர் கருணாநிதி, நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தது தான் என் தவறு , எனக்கு இதுவும் வேண்டும்! இன்னமும் வேண்டும். என கலைஞர் பேசியது மிகவும் பரபரப்பாக பொழுது பேசப்பட்டது.

 

இதனால் கோபமடைந்த சிவாஜி காட்டமாக பதில் அளித்துள்ளார். திமுக அரசின் கலைஞர் அவர்கள் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியாது. என்னையும் எம்ஜிஆர் அவர்களையும் தனியாக விமர்சனம் செய்கிறார்.

 

எங்களை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசும் அவசியம் அவருக்கு வந்துவிட்டது. நடிகர்கள் அரசியல் பேசலாமா என்று கேட்கிறார். அவர் மட்டும் பேச வேண்டும் என்றால் அவருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது என்று கேட்டு காட்டமாக பேசியுள்ளார்.

 

நான் பேசியதால்தான் அந்த வசனம் மிகவும் பெருமையாக பேசப்பட்டதே தவிர அவர் வார்த்தைகளுக்காக அல்ல. எனக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் கலைஞரின் அரசியல் பற்றி தெரியும் ஏனென்றால் நாங்கள் பார்த்து வந்தவர் தான் கருணாநிதி.

 

கலைஞர் அரசியலுக்கு எப்படி வந்தார் என்பது எங்கள் இருவருக்கும் நன்றாகவே தெரியும்.

 

கலையை தெய்வமாக மதிப்பவரை நாங்கள் நாட்டை நல்வழியில் நடத்துவதற்காக இருவரும் போட்டியிடுகிறோம் என சிவாஜி பதில் அளித்திருந்தார்.