Vidaamuyarchi movie: விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் படம் தான் விடாமுயற்சி. இப்படத்தில் அர்ஜுன், ரெஜினா, ஆரவ், த்ரிஷா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில், விடாமுயற்சி படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தின் 150 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஹாலிவுட் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி விடாமுயற்சி திரைப்படம் “பிரேக்டவுன்” படத்தின் தழுவலாக உள்ளது என குற்றச்சாட்டு முன் வைத்தது.
இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்து இருக்கிறது அதாவது, கடந்த இரண்டு வருடங்களாக அஜித் திரைப்படம் வெளியாக வில்லை. விடாமுயற்சி திரைப்படத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம். படம் ரிலீஸ் ஆக இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் இது வரை படம் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியிட விலை.
மேலும், ஒரு சிங்கிள் ட்ராக் கூட ரிலீசாகவில்லை, இப் படத்தை திரையரங்குகளில் பார்க்க முன்பதிவு செய்ய இணையத்தில் இதுவரை எவ்வித புக்கிங் வசதிகளும் ஓப்பன் ஆகவில்லை என்றும் மேலும், இந்த படம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட வில்லை என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.
லைக்கா நிறுவனம் கடைசியாக எடுத்த இரண்டு படங்களான வேட்டையன் மற்றும் இந்தியன் -2 திரைப்படங்கள் சரிவர வரவேற்பை பெறவில்லை என்பதால் நிதி பற்றாக்குறை காரணமாக ஹாலிவுட் நிறுவனத்திற்கு 150 கோடி நஷ்ட பணம் தருவது தொடர்பாக சிக்கல் ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிய வருகிறது.