Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாக்காளர் இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் சென்ற வருடம் முன்னெடுக்கப்பட்டன. ஜனவரி மாதம் 1-ம் தேதி வாக்காளாராகும் தகுதி நாளாகக் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டது, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 6 கோடியே 22 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.09 கொடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.19 கோடி ஆகும் மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 342 ஆகும். இந்த சூழ்நிலையில், புதிய வாக்காளர்கள் தங்களுடைய பெயரை சேர்க்கவும், ஏற்கனவே பதிவு செய்திருந்த வாக்காளர்கள் தன்னுடைய பெயரில் தவறு இருந்தால் திருத்திக் கொள்ளவும்,

முகவரி மாறியவர்கள் அதற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ நேற்று அறிவித்து இருந்தார்.

அதனடிப்படையில் இன்று காலை 10 மணி அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் எல்லோரும் அந்தந்த மாவட்டங்களில் வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடுவார்கள். இந்த வாக்காளர் பட்டியலை இணையதளத்திலும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும். வாக்காளர்கள் அவற்றில் தங்களுடைய பெயர் விபரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version