74 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடும் “சூப்பர் ஸ்டார்” அவர்களுக்கு, ரசிகர்கள் பலரும் பலவிதமாக தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘கூலி’ படம் பற்றி இன்று தகவல் வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்நிலையில் இவர் ஆரம்ப காலகட்டத்தில் கன்டக்டராக பணி புரிந்த போது ஏற்பட்ட சுவாரசியமான விஷயங்களை காணலாம்.
இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். ஆரம்ப காலகட்டங்களில் இவர், பெரிதும் கஷ்டப்பட்டு உள்ளார். இவரது ஐந்து வயதிலேயே, தாய் இறந்து விட்டார். இவரது வறுமை நிலை காரணமாக, கர்நாடகவில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார். இவர் அப்போதே அரை மணி நேரம் பார்க்க வேண்டிய வேலையை 10 நிமிடத்திலேயே செய்து முடிப்பார்.
அப்படி இருக்க முன்னேற வேண்டும் என்ற ஆசையில், 15 வயதிலேயே பெங்களூரில் இருந்து சென்னைக்கு வீட்டிற்கு தெரியாமல் ஓடி வந்தார். பெங்களூரில் ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்த போது, இவருக்கு எதிரில் சென்னை வண்டி நின்றுள்ளது. சென்னைக்கு வந்தபின், அனைத்து பேசஞ்சர் இடமும் ரயில்வே அதிகாரி டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எடுத்த டிக்கெட்டை தேடும்போது தான் தொலைத்து இருப்பது தெரியவந்தது. அப்போதும் நேர்மை தவறாது, அதிகாரியிடம் தான் ரயிலில் ‘டிக்கெட்டை தொலைத்து விட்டேன்’ என்று கூறினார். அதைக் கேட்ட அவர், ரஜினியை ஓரமாக நிற்கும்படி கூறியுள்ளார். இவர் ரொம்ப நேரமாகவே அங்கே நின்றுள்ளார். இதைக் கண்ட அங்குள்ள ஊழியர்கள் அதிகாரியிடம் பேசி இவரை அனுப்பி வைத்துள்ளனர்.
இதுவே சென்னையில் முதன்முதலாக அவர் பட்ட அனுபவம். என்னுளிலும் நேர்மை தவறாத இவர் செயல்பற்றி ரசிகர்கள் வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.