நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட முதல் மந்திரி! மருத்துவர்கள் சொன்ன ஆலோசனை!
ராஜஸ்தான் முதல் மந்திரியாக உள்ளவர் அசோக் கெலாட். அவருக்கு இன்று கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவரை ஜெய்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்து கொள்ளவும் உள்ளார்.
இப்போதைய அமைச்சர்கள் அனைவரும் இணையம் மற்றும் ட்விட்டர் தளங்களில் ஆக்டிவ் ஆக உள்ளனர். மேலும் இது பற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். அதில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, குணம் அடைந்த பின்பு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டது என்றும், நேற்றிலிருந்து கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக மருத்துவமனையில் மருத்துவர்கள் சொன்ன ஆலோசனையின்படி ஆஞ்சியோ சிகிச்சை செய்து கொள்ள உள்ளேன். மேலும் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையிலேயே மீண்டும் சிகிச்சை பெற்று கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நலமுடன் உள்ளேன் என்றும், விரைவில் மீண்டு வருவேன் என்றும் கூறி உள்ளார். மேலும் அவர் உங்களுடைய ஆசிகளும், வாழ்த்துகளும் என்னுடன் உள்ளன எனவும் தெரிவித்து இருந்தார்.