Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல் ஆளாக பசுமை ஆட்டோவிற்கு மாறிய நபர்! 4 மணி நேரத்திற்கு 120 கிலோமீட்டர்கள்!

The first person to switch to Green Auto! 120 kilometers in 4 hours!

The first person to switch to Green Auto! 120 kilometers in 4 hours!

முதல் ஆளாக பசுமை ஆட்டோவிற்கு மாறிய நபர்! 4 மணி நேரத்திற்கு 120 கிலோமீட்டர்கள்!

தற்போது அனைத்து மாநிலங்களிலுமே பெட்ரோல்-டீசல் விலை கட்டுக் கடங்காமல் பொய் கொண்டு உள்ளது. அதன் காரணமாக பொது மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். அதுபோல் கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது. இதனால் ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சிலர் பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சைக்கிளுக்கும் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு டிரைவர், பேட்டரியில் இயங்கும் பசுமை ஆட்டோவை வாங்கி ஓட்டி வருகிறார். சாம்ராஜ் நகர் டவுனை சேர்ந்தவர் ஜோசப் ஆலிவர் என்ற நபர். டிரைவராக வேலை செய்த இவர் தான், தற்போது பேட்டரியில் இயங்கும் பசுமை ஆட்டோவை ஓட்டி வருகிறார். இதுபற்றி அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்த விஷயம் இதுதான்.
நான் வெளியூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டேன். கடையோ அல்லது வேறு ஏதேனும் தொழில் செய்ய நினைத்தேன். ஆனால் அந்த அளவிற்கு முதலீடு செய்ய என்னிடம் பணம் இல்லை. நான் வசதியும் இல்லை. இந்த நிலையில்தான் ஆட்டோ ஓட்ட முடிவு செய்தேன். மேலும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் ஆட்டோவை வைத்து சம்பாதிக்க முடியுமா? என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது.
இந்த நிலையில் தெலுங்கானாவில் ஒரு நிறுவனத்தில் பேட்டரியில் இயங்கும் பசுமை ஆட்டோ தயாரித்து விற்பதை பற்றி அறிந்தேன். அதன்படி ரூ.2.10 லட்சத்துக்கு அந்த ஆட்டோவை வாங்கி தற்போது ஓட்டி வருகிறேன். பெட்ரோல் செலவு மிச்சம். இதனால் அதிக லாபம் கிடைக்கிறது. இந்த ஆட்டோவில் பொருத்தப்பட்டு இருப்பது 48 வோல்ட் லித்தியம் பேட்டரி ஆகும்.
4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டர் தூரம் வரை ஆட்டோவை ஓட்டலாம். அதனுடன் கூடுதலாக சோலாரும் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரிக்கு 3 ஆண்டு காலம் உத்தரவாதம் உள்ளது. இந்த ஆட்டோ ஒரு மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. மருத்துவமனைகளுக்கு செல்வோர் எனது ஆட்டோவில் விரும்பி வந்து பயணம் செய்கின்றனர்.
இப்போது இல்லை என்றாலும் எதிர்காலத்தில் இந்தவகை ஆட்டோக்கள் சாலைகளில் அதிகளவில் ஓடும் என்று அவர் தெரிவித்தார். மேலும் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஓடும் முதல் பசுமை ஆட்டோ ஜோசன் ஆலிவருடையது என்பது குறிப்பிடத்தக்கது. பசுமை ஆட்டோவை ஓட்டும் ஜோசன் ஆலிவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Exit mobile version