அமைதியாக நடந்து முடிந்த முதல் கட்ட வாக்கு பதிவு! தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சதவீதம் ..??
நாடளுமன்ற தேர்தலின் ஒரு பகுதியாக தமிழகத்தில் முதல் கட்டத் தேர்தலின் வாக்குப் பதிவு நேற்று(ஏப்ரல்19) அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதே போல புதுச்சேரி, ஆந்திரா உள்பட 21 மாநிலங்களில் இருக்கும் 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் ஒரு சில வாக்குச் சாவடிகளில் இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரையில் நடைபெற்றது. இருப்பினும் 6 மணிக்கு முன்னதாக வந்த நிறைய பேர் வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று கொண்டிருந்ததனர். இதையடுத்து 6 மணிக்கு முன்னதாக வந்தவர்களுக்கு டெக்கான் வழங்கப்பட்டு அவர்கள் அனைவரும் 7 மணி வரை வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
இரவு 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் சேர்த்து பார்க்கும் பொழுது சராசரியாக 72.09 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பதிவான மெத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை விட 3 சதவீதம் குறைவு என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அடுத்து தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எவ்வளவு என்பதை சதவீதம் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம்.
மத்திய சென்னி தொகுதியில் 53.91 சதவீதமும், வடசென்னை தொகுதியில் 60.13 சதவீதமும், தென்சென்னை தொகுதியில் 54.27 சதவீதமும் வாக்குப்பதிவு ஆகியுள்ளது. திருவள்ளூரில் 68.31 சதவீதமும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 60.21 சதவீதமும், காஞ்சிபுரம் தொகுதியில் 71.55 சதவீதமும், அரக்கோணம் தொகுதியில் 74.08 சதவீதமும் பதிவாகியுள்ளது.
வேலூர் தொகுதியில் 73.42 சதவீதம் வாக்குப்பதிவும், கிருஷ்ணகிரியில் 71.31 சதவீதமும், தருமபுரியில் 81.48 சதவீதமும், ஆரணி தொகுதியில் 75.65 சதவீதமும், திருவண்ணாமலையில் 73.88 சதவீதமும் விழுப்புரம் தொகுதியில் 76.47 சதவீதமும், கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீதமும், நாமக்கல் தொகுதியில் 78.16 சதவீதமும், சேம் தொகுதியில் 78.13 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருக்கின்றது.
ஈரோடு தொகுதியில் 70.54 சதவீதமும், நீலகிரி தொகுதியில் 70.93 சதவீதமும், திருப்பூர் தொகுதியில் 70.54 சதவீதமும், கோவையில் 64.81 சதவீதமும், பொள்ளாச்சி தொகுதியில 70.70 சதவீதமும், திண்டுக்கல்லில் 70.99 சதவீதமும், கரூர் தொகுதியில் 78.61 சதவீதமும், திருச்சியில் 67.45 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
சிதம்பரம் தொகுதியில் 75.32 சதவீதமும், கடலூரில் 72.28 சதவீதமும், பெரம்பலூர் தொகுதியில் 77.37 சதவீதமும், மயிலாடுதுறையில் 70.06 சதவீதமும், நாகப்பட்டினத்தில் 71.55 சதவீதமும், தஞ்சாவூர் தொகுதியில் 69.18 சதவீதமும், சிவகங்கை தொகுதியில் 63.94 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதே போல மதுரை தொகுதியில் 61.92 சதவீதமும், தேனியில் 69.87 சதவீதமும், விருதுநகர் தொகுதியில் 70.17 சதவீதமும், தென்காசி தொகுதியில் 67.55 சதவீதமும், திருநெல்வேலி தொகுதியில் 64.10 சதவீதமும், கன்னியாகுமரி தொகுதியில் 65.46 சதவீதமும், தூத்துக்குடியில் 59.96 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருக்கின்றது.