செவ்வாய் கிரகத்திற்கு முதன் முறையாக டெல்டா திரஸ்டர் என்ஜின் இயக்கப்பட்டு ஹோப் என்ற அமீரகத்தின் விண்கலம் திருப்பி விடப்பட்டது. இது குறித்து முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் கூறும்போது இந்த ஹோப் விண்கலம் இந்த மையத்திலியே உருவாக்கப்பட்டது.
இந்த விண்கலத்தின் எடை 1,500 கிலோ ஆகும். இதில் 3 சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது இந்த சூரிய மின்தகடுகளால் 1,800 வாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும். ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கக்கூடிய ‘டெல்டா-5’ என்ற திரஸ்டர் என்ஜின் இந்த விண்கலத்தில் உள்ளது.
இந்த விண்கலம் 1000 ஜிகாபைட் தகவல்களை அனுப்ப 2 ஆண்டுகள் எடுத்து கொள்ளும். 800 கிலோ ஹைட்ரஜன் எரிபொருள் உள்ளே நிரப்பப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் திருப்பி விடுவதற்காக டெல்டா திரஸ்டர் என்ஜின் முதல் முறையாக இயக்கப்பட்டது.
இதில் 6 திரஸ்டர்களும் இயங்கின. முதல் முயற்சியிலேயே தவறுகள் நிகழ்ந்துவிடாமல் மிகச்சரியாக ஹோப் விண்கலத்தின் பாதை சரிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.