காலணி திருடிய உணவு டெலிவரி பாய்.. ஆதரவு தெரிவித்த பிரபல நடிகருக்கு குவியும் கண்டனங்கள்..!!
பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தமிழில் நிறைய படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார். குறிப்பாக அருந்ததி படத்தில் அடியே பொம்மாயி என்று இவர் கூறும் அந்த டயலாக்கை இப்போது கேட்டும் உள்ளுக்குள் ஒரு மரண பீதி உருவாகும். இருப்பினும் இவர் படங்களில் மட்டுமே வில்லன். ரியல் லைஃபில் உண்மையான ஹீரோவாக வலம் வருகிறார்.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் உதவி என்று கேட்ட அனைத்து மக்களுக்கும் தன்னால் முயன்ற உதவிகளை செய்து பிரபலமானவர் தான் நடிகர் சோனு சூட். இப்போது வரை ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், ஒரே ஒரு ட்வீட் செய்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் சோனு சூட்.
அதாவது கடந்த சில தினங்களுக்கு ஸ்விகி டெலிவரி பாய் ஒருவர் வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்த பின் வீட்டு வாசலில் இருந்த ஷூக்களை திருடி சென்றார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், அந்த டெலிவரி பாய்க்கு ஆதரவாக சோனு சூட் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இதுகுறித்து அவரு கூறியிருப்பதாவது, “டெலிவரி பாய் உணவை வழங்கிய பின்னர் ஷூக்களை திருடி இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக அவருக்கு ஒரு ஜோடி ஷூக்களை வாங்கி கொடுங்கள். அன்பாக இருங்கள்” என எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பலரும் திருடுவதை நியாயப்படுத்துவது மரியாதையான செயல் அல்ல என விமர்சித்து வருகிறார்கள். மேலும், செயின் பறிப்பவர் செயினை பறித்து சென்றால் அவர் மீது புகார் அளிக்காமல் புதிய செயினை பரிசாக அளிக்கலாமா என்று சோனு சூட் பாணியிலேயே அவருக்கு பதிலளித்து வருகிறார்கள்.