Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு பெண்ணுக்காக நண்பனை கொலை செய்த நண்பன் !!

திண்டுக்கல் மாவட்டத்தில் மதுபோதையில் நண்பனை கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாலையூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அஜித் என்பவருடன் சேலையூரில் உள்ள வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.இவ்விருவரும் சமீப காலமாக ஒரே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது .ஆனால் அந்தப் பெண் மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத அஜித் ,நேற்று மணிகண்டன் மற்றும் மற்றொரு நண்பருடன் சேர்ந்து அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு மது அருந்த சென்றுள்ளார்.

அப்பொழுது போதை அதிகமான நிலையில், அஜித்தும் மற்றொரு நண்பரும் சேர்ந்து மணிகண்டனை மது அருந்திய பாட்டில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதனால் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ரத்தம் படிந்த கரையுடன் வந்த அஜீத்தை பார்த்த பொதுமக்கள் , அவரை பிடித்து திண்டுக்கல் வட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வந்த காவல்துறையினர் இறந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மணிகண்டனை கொலை செய்ய பயன்படுத்திய மது பாட்டில்களை கைப்பற்றியதோடு,பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்ட அஜித்தை கைது செய்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Exit mobile version