செவ்வாய்க்கிழமை தோறும் இனி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்றால் சில தளர்வுகள் உடன் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முழு ஊரடங்கு உத்தரவு வாரத்தில் ஞாயிறு தோறும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த வார இறுதியில் அரசு விழாவும், ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த தினம் என்பதாலும் முழு ஊரடங்கு உத்தரவினை வார இறுதியில் பின்பற்றாமல் செவ்வாய்க்கிழமை முழு ஊரடங்கு புதுச்சேரியில் அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, புதுச்சேரியில் இதுவரையில் 6,995 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 4009 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும், புதுச்சேரியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மேற்பார்வையில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் உங்கள் படுத்தப்பட்டு வருகிறது. சனி மற்றும் ஞாயிறுகளில் அரசு விடுமுறை மற்றும் முகூர்த்த நாள் போன்ற விழாக்கள் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். மேலும் வியாபாரிகளின் சிரமத்தை கவனத்தில் கொண்டும். கொரோனாவால் மக்களின் நிலை ஒருபுறமிருக்க, மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வாரத்தை தவிர்த்துள்ளோம்.
வருகிற செவ்வாய்க்கிழமை முழு ஊரடங்கினை மக்கள் முழுவதும் பின்பற்றுகிறார்களா? வெளியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா? அல்லது வீட்டிலேயே இருக்கப் போகிறார்களா என்பதை பற்றி கவனித்து விட்டு தேவைப்பட்டால் மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கும்” என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.