Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பா.ம.கவின் எதிர்காலம் உங்கள் கையில் தான் இருக்கிறது! மருத்துவர் ராமதாஸ் பேச்சு!

பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மறைமலைநகரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில வன்னியர் சங்க செயலாளரும், செங்கல்பட்டு தொகுதியின் முன்னாள் சட்டசபை உறுப்பினருமான திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏகே மூர்த்தி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்று கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது பாட்டாளி மக்கள் கட்சியின் ஒற்றை இலக்கு தமிழகத்தை நாம் ஆள வேண்டும் 42 வருடங்களாக பொதுமக்களுக்காக போராடி வாதாடி இருக்கின்றேன். ஆனால் அதற்கு எந்தவிதமான பயனும் இதுவரையில் கிடைக்கவில்லை. இனி இந்த கட்சியின் எதிர்காலம் இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது என கூறியிருக்கிறார்.

அன்புமணியை போன்ற ஒரு திறமைசாலி இன்னொருவர் இல்லை இனி மறுபடியும் நாம் ஆள வேண்டும், நம்மிடம் ஆட்சிப் பொறுப்பு வர வேண்டும், ஆகவே கிராமம், கிராமமாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் அமர்ந்து திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் 2 கோடி மக்கள் தொகை இருக்கின்ற நாம் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டோம் ஆனால் எனக்கு 10.5% கொடுத்ததற்கு மற்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் உயர்நீதிமன்றம் சென்றார்கள், 84 வயதிலும் பொது மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். இறுதிவரையிலும் வன்னிய மக்களுக்காக போராட வேண்டும், ஒருமுறை மாற்றத்தை நான் பார்க்க வேண்டும், நம்முடைய இலக்கை அடைய, சிகரத்தை எட்டிப் பிடிக்க, நாம் எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் உரையாற்றி இருக்கிறார்.

Exit mobile version