தாய் குளிக்கும் வீடியோவை இன்ஸ்ட்டா லைவ் செய்த மகள்- பெற்றோர்களே உஷார்

0
202
Representative purpose only

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த தர்ம சங்கடமான நிகழ்வு ஒன்றை டிக் டாக் செயலியில் பகிர்ந்துள்ளார்.

குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் நேர்த்தியான கலை . அதை எல்லோராலும் எல்லா நேரத்திலும் நேர்த்தியாக கையாண்டு விட முடியாது.

அதுவும் இன்றைய நவீன காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சிக்கலான சவாலாய் உள்ளது.

இப்படி தன பெண் குழந்தையால் நடந்த தர்ம சங்கடமான சூழல் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பெண் பிரியானாவிற்க்கு பெண் குழந்தை உள்ளது. தனியாக செல்போனை கையாள தெரியாத வயது குழந்தை. அவர் அந்த போனில் தனது குழந்தைக்கு தேவையான கல்வி சம்மந்தப்பட்ட ஆப் ஏற்றி வைத்துள்ளார்.

ஒரு நாள் அவர் குழந்தையின் கையில் போனை கொடுத்து விட்டு குளிக்க சென்றார். குழந்தையும் வீடியோவை பார்த்து கொண்டிருந்தது.

திடீரென்று வீடியோ நின்று விட, குழந்தை தானாகவே விடியோவை ஆன் செய்ய முற்பட்டுள்ளது. பாத்ரூமில் உள்ள தாயை கதவை தட்டி அழைக்கவே தாயும் குழந்தையை கதவை திறந்து உள்ளே அழைத்திருக்கிறார்.

குழந்தையின் கையிலிருந்த போனை வாங்கும் போதே அவருக்கு தெரிந்திருக்கிறது இன்ஸ்டாகிராம் லைவ் ஆனால் உள்ளது என்று. அதற்குள் அந்த லைவ் வீடியோவிற்கு ஒரு சில கமெண்டுகள் வந்து விட்டன.

இந்த பதிவிற்கு கமாண்ட் செய்த இன்னொரு பெண் ஒருவர் அவர் ஒருமுறை பாத் டப்பில் குளித்து கொண்டிருக்கும் போதே அவருடைய குழந்தை முகநூல் பக்கத்தில் லைவ் சென்றதாக கூறினார்.

பெற்றோர்களே உங்கள் குழந்தைகளிடம் போனை கொடுப்பதற்கு முன்பாக அதற்கான பாதுகாப்பினை உறுதி செய்த பிறகே கொடுங்கள். இல்லையென்றால் இது போன்ற நிகழ்வு உங்களுக்கும் நடக்க வாய்ப்பு உள்ளது.