Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளி பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி! மருத்துவமனையில் திவீர சிகிச்சை!

The girl fell from the school bus! Intensive care in the hospital!

The girl fell from the school bus! Intensive care in the hospital!

பள்ளி பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி! மருத்துவமனையில் திவீர சிகிச்சை!

தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டியை அடுத்த தொட்டம்பட்டியைச் சேர்ந்த பத்து வயதுடைய  சிறுமி , கோவில்பட்டியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாக அந்த சிறுமி பள்ளி வாகனத்தில் சென்று வருவார் . அவ்வாறு நேற்று சிறுமியின் ஊரில் இருந்து மாணவிகளை ஏற்றி கொண்டு முடுக்கலாங்குளம் பகுதியில் பள்ளி பேருந்தானது சென்று கொண்டிருந்தது.

 அப்போது எதிர்பாராதவிதமாக  அந்த சிறுமி பேருந்தின் அவசர வழி கதவு வழியாக கீழே விழுந்துள்ளார். அதில் சிறுமி பலத்த காயம் அடைந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version