என்னவென்றே தெரியாமல் காதலன் செய்த செயலை அப்படியே மேற்கொண்ட காதலி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

0
150

என்னவென்றே தெரியாமல் காதலன் செய்த செயலை அப்படியே மேற்கொண்ட காதலி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா பகுதி இளமனூரை சேர்ந்தவர் வர்கீஸ். இவரது மகன் ஜெபின் ஜோன். அதேபோல் முதுவெல் பகுதியை சேர்ந்த ஜோன் மாத்யூவின்  மகள் சோனா ஷெரின். இவர்கள் இருவருமே கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். கல்லூரியில் நட்பாக பழகி வந்த இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர்கள்.

இவர்களது காதல் குறித்து இரு வீட்டாருக்கும் தெரிந்த நிலையிலும், அவர்கள் எதுவும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் காதலுக்கு சம்மதமும் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று காலை ஜெபின் தனது வீட்டின் படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் அவர் எதற்காக செய்து கொண்டார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சோனாவும் என்ன ஏதுவென்றே தெரியாமல் தனது வீட்டு படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் உடனே தூக்கில் தொங்கினார். அடுத்தடுத்து இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து இருவரது பெற்றோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

அதன் பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் ஜெபின் தற்கொலை செய்ததை அறிந்த பின்னர் அதே போல் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் இருவரும் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொண்டார்கள் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.