Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாடக காதலால் பட்டியலின பெண்ணை காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு தக்க தண்டனை கொடுத்த காதலி

நாடக காதல் செய்து ஏமாற்றிய காதலனுக்கு, சாதிய வன்கொடுமை சட்டப் பிரிவின் படி போராடி தண்டனை பெற்றுத் தந்துள்ளார் காதலியான இளம்பெண்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடுப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள எலத்தூர் அண்ணாநகரில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் சசி பிரியா. இவர் பொறியியல் பட்டதாரி ஆவார்.

சசி பிரியாவும், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் பொறியியல் பட்டதாரியான கிரி சங்கர் என்பவரும் கடந்த ஒரு வருட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சசி ப்ரியாவின் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், காதலன் கிரிசங்கர் வீட்டில் திருமணத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

The girlfriend who gave due punishment to the boyfriend who cheated on the Dalit girl by falling in love with the play
The girlfriend who gave due punishment to the boyfriend who cheated on the Dalit girl by falling in love with the play

மேலும் சசி பிரியா பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்கு கிரி சங்கரின் வீட்டில் பலத்த எதிர்ப்பு தெரிவித்தத‌ அவரது‌ பெற்றோர், கிரி சங்கரை ஊரிலிருந்து மற்றொரு இடமான தனது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் கிரி சங்கரின் தாய் ஒரு வாரத்திற்கு முன்பு சசி பிரியாவின் வீட்டிற்கு சென்று பட்டியலின வகுப்பைச் சேர்ந்த அவரது குடும்பத்தை இழிவாகவும், சாதிப் பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளாலும் பேசி இருக்கிறார்.

இதனால் மனம் உடைந்து தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற சசி பிரியாவை அக்கம்பக்கத்தினர் பார்த்து அவரை காப்பாற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த நிலையில், காதலித்து ஏமாற்றிய கிரி சங்கரின் வீட்டிற்கு சென்ற சசி பிரியா, வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தனது காதலனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

The girlfriend who gave due punishment to the boyfriend who cheated on the Dalit girl by falling in love with the play
The girlfriend who gave due punishment to the boyfriend who cheated on the Dalit girl by falling in love with the play

இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சசி பிரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும் தனது காதலனை சேர்த்து வைக்கும் வரை எனது போராட்டத்தை கைவிட மாட்டேன் என கூறியுள்ளார்.

இதற்குப் பிறகு, போலீசார் அவரிடம் புகார் வாக்குமூலம் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டதன் பேரில், கிரிசங்கர் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், அவரது தாய் மற்றும் தந்தை தனது வீட்டிற்கு வந்து சாதியின் பெயரைச் சொல்லி இழிவாக திட்டியதாகவும், இவரின் மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பிறகு சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளார்.

The girlfriend who gave due punishment to the boyfriend who cheated on the Dalit girl by falling in love with the play
The girlfriend who gave due punishment to the boyfriend who cheated on the Dalit girl by falling in love with the play

இந்த சம்பவத்திற்கு பிறகு போராடி தண்டனை பெற்றுத் தந்த சசி பிரியாவின் உண்மையான காதல் மற்றும் விடாப்பிடியான முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இது நாடக காதல் செய்ததுடன், சாதிப் பெயர் சொல்லி ஏமாற்றி வருபவர்களுக்கு தகுந்த பாடமாக இருக்கும் எனவும் கூறிவருகிறார்கள்.

Exit mobile version