சிறுமி கருமுட்டை விவகாரம்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் தனியார் மருத்துவமனையான சுதா மருத்துவமனை மற்றும் சுதா ஸ்கேன் மையத்திற்கு தமிழக அரசு சீல் வைக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் படி மருத்துவக் குழுவினர் சுதா மருத்துவமனை மற்றும் சுதா ஸ்கேன் மையங்களுக்கும் சீல் வைத்தனர். மேலும் மருத்துவமனையில் புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்தும் சிகிச்சையில் உள்ள நோயாளிகளை 15 நாட்களுக்குள் திருப்பி அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டது.
மேலும் சிறுமி கருமுட்டை விவகாரத்தில் விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஆலோசனை நடத்தவுள்ளனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.