Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரசு! பிஎம் கிசான் தொகை எப்போ கிடைக்கும் தெரியுமா? வெளியான முக்கிய செய்தி! 

விவசாயிகள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டம் மூலமாக மத்திய அரசு 2000 ரூபாய் வழங்கி வரும் நிலையில் அடுத்த தவணை தொகை எப்பொழுது கிடைக்கும் என்பது குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது.
நாட்டின் முதுகெலும்பு என்று கருதப்படும் விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் பயன் பெறும் விதமாக பிஎம் கிசான் என்று அழைக்கப்படும் “பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா” திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த பிஎம் கிசான் திட்டம் மூலமாக விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் விவசாயிகள் 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் போதும்.
அந்த வகையில் நாடு முழுவதும் கிராமப் புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் பயிரிடும் விவசாயிகளுக்கு இதுவரை 17 தவணையாக 2000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுள்ளது. இதில் கடைசி தவணையான 17வது தவணை தொகை 2000 ரூபாய் கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து விவசாயிகள் அனைவரும் 18வது தவணைத் தொகையான 2000 ரூபாயை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் 18வது தவணைத் தொகை 2000 ரூபாய் அக்டோபர் மாதம் கிடைக்கும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.
இருப்பினும் இந்த தவணையை பெறுவதற்கு விவசாயிகள் குறிப்பிட்ட சில விஷயங்களை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. அதாவது 18வது தவணையை பெறுவதற்கு விவசாயிகள் அதற்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். அதே போல நிலச்சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும். மேலும் இத்துடன் விவசாயிகள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆப்லைன் மூலமாகவோ இகெஒய்சி(eKyc) செய்திருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
Exit mobile version