Delhi:டெல்லியில் காற்று மாசு கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லியில் பனி காலங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த சீசனில் காற்று மாசு அளவானது 486-ஆக அதிகரித்துள்ளது. இதனால் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க கோரி வழக்கு அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.இந்த வழக்கானது நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் ஜார்ஜ் மாசிக் ஆகியோர் முன் விசாரணை செய்யப்பட்டது.
இதில் இரண்டு நாட்களாக காற்று மாசு டெல்லியில் அதிகரித்து வருகிது. இந்த நிலையை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும், அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்க டெல்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மற்றும் டெல்லியின் காற்று மாசு என்பது ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 40 சிகரெட் குடிப்பதற்கு சமம் என்ற அளவற்கு காற்றின் மாசு அதிகரித்து இருக்கிறது.
அதாவது காற்றின் தர மதிப்பு 100 ஐ தாண்டினால் அது சுவாசிக்க ஏற்றது அல்ல. ஆனால் டெல்லியில் காற்றின் தரம் 486 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் காற்று பனிமூட்டம் போல் இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது, அதாவது சர்வதேச விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. 7 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
30 ரயில்கள் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.