Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தம் அடித்த அரசு பள்ளி மாணவிகள்!அதனை கண்ட  சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்!

The government school girls who beat her!

The government school girls who beat her!

தம் அடித்த அரசு பள்ளி மாணவிகள்!அதனை கண்ட  சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்!

கேரளாவில் தற்போது ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதனைதொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் ஓணம் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொல்லம் நகர் பகுதியில் பிரபலமாக அரசு பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் நேற்றுமுன்தினம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது மாணவிகள் பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகத்தில் துள்ளி குதித்து மகிழ்ந்தனர்.

அதனையடுத்து  மாலை நான்கு மணியளவில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளியின் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் நான்கு பேர் சிகரெட் பிடித்து கொண்டிருந்தனர். அங்கு அவர்கள் ஒரே சிகரெட்டை நான்கு பேரும் மாற்றி, மாற்றி பிடித்து புகை விட்டுக் கொண்டிருந்தனர்.

அதனை கண்ட 7 ஆம் வகுப்பு மாணவி அதிர்ச்சி அடைந்தார். மேலும் புகைபிடித்து கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் 7 ஆம் வகுப்பு மாணவியை கண்டு பதற்றம் அடைந்தார்.உடனடியாக அவர்கள் அந்த 7 ஆம் வகுப்பு மாணவியை பிடித்து இங்கு நீ பார்த்ததை யாரிடமும் சொல்ல கூடாது எனவும் மிரட்டி உள்ளனர்.

மேலும் அவர்கள் அந்த மாணவியின் தலைமுடியை கத்திரி எடுத்து வெட்டியுள்ளனர். அந்த மாணவி அவர்களிடம்மிருந்து தப்பித்து தலைமைஆசிரியரிடம் சென்று புகார் அளித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அந்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அதன் பிறகு சம்பந்தப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version