போலீசாருக்கு மகிழ்ச்சி செய்தியை சொன்ன அரசு! புதிய பதவிகள் குறித்த அறிவிப்பு!
தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு இன்ஸ்பெக்டர் உயர்ந்த பதவி வழங்கலாம் என கூறப்பட்டு வரும் நிலையில் அவர்களின் பெயர் பட்டியல்களை சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கட்சிதான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் பல மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அதேபோல் காவல் துறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது விவரப் பட்டியல் தயாரிக்கப்பட்டு டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்நிலையில் போலீசில் புதிய பதவிகள் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. காவல்துறையில் எட்டாவது மற்றும் பத்தாவது படித்தவர்கள் போலிசில் சேர்ந்த 35 முதல் 40 வருடங்கள் ஏட்டாகவே இருந்து பணி ஓய்வு பெற்று வந்த நிலையில், முன்னாள் முதல்வர் டாக்டர் கருணாநிதி அவர்கள் செய்த மாற்றம் காரணமாக சிறப்பு எஸ்.ஐ ஆக பதவி உயர்வு கொடுத்து செயல்படுத்தினார்கள்.
ஏட்டாக சேர்ந்த 15 ஆண்டுகளில் தலைமை காவலர் மற்றும் 25 ஆண்டுகளில் சிறப்பு எஸ்.ஐ பதவிகள் மற்றும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பற்றி உத்தரவிடப்பட்டது. தேர்தல் வாக்குறுதி பல வழங்கப்பட்ட நிலையில் 35 ஆண்டுகள் பணி செய்பவர்களுக்கு ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் பதவியும் கொடுக்க அரசு தற்போது ஆலோசனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே அக்டோபர் 2022 ம் ஆண்டு வரை 35 ஆண்டு காலம் பணி மூப்பு அடைந்தவர்களின் பட்டியலை தற்போது மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் டிஜிபி அலுவலகங்களிலிருந்து வெளியிட அறிவுறுத்தப்பட்ட நிலையில் சிறப்பு எஸ்.ஐ. களின் விபரப்பட்டியல் தற்போது அனுப்பப்பட்டுள்ளது.