உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் சவுதி அரேபியாவில் வட பிராந்தியத்தில் டாபுக் மாகாணம் உள்ளது. கொரோனா தாக்கத்தால் பொருளாதரத்தை கருத்தில் கொண்டு அந்த மாகாணத்தின் கல்வி இயக்குனரகம் டாபுக்கில் உள்ள 186 பள்ளிகள், நடப்பு கல்வியாண்டின் முதல் செமஸ்டர் கல்வி கட்டணத்தை பாதியாக குறைக்க சம்மதித்துள்ளன. இதனால், 30 ஆயிரம் மாணவர்கள் பலன் அடைவார்கள். அவர்களின் பெற்றோருக்கு மொத்தம் 9 கோடி சவுதி ரியால் மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.