Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடரும் பட்டாசு ஆலை விபத்து அரசின் மெத்தனப் போக்குதான் காரணம்!! எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்!!

The government's laxity is the reason for the ongoing firecracker accident!! Leader of opposition condemned!!

The government's laxity is the reason for the ongoing firecracker accident!! Leader of opposition condemned!!

விருதுநகர் மாவட்டம்: அப்பையநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்க வரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு வெடிவிபத்தில் ஐந்து அறைகள் தரைமட்டம் ஆகினார். இந்த பட்டாசு வெடி விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற பட்டாசு ஆலை விபத்திற்கு காரணம் இந்த திமுக அரசின் மெத்தனப் போக்கினால் தான் நடக்கின்றது என அதிமுக பொதுச்செயலாளருமான மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவிப்பது.

விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்டு வெடிவிபத்தில் ஆறு பேர் இறந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்காக எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும்  முறையான பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பட்டாசு ஆலை பாதுகாப்பில் தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படும் திமுக  அரசுக்கு எனது கடும் கண்டனம் என்றார்.

மேலும் பட்டாசு ஆலை விபத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன் இனியாவது பட்டாசாலையில் பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக பின்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version