நாடு முழுவதும் தேசிய புலனாய்வு பிரிவினர் பிஎஃப் ஐ அமைப்பினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் அடிப்படையில் நாடு முழுவதும் 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்திலிருந்து 11 பேரை கைது செய்திருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் அந்த அமைப்பிற்கு ஆதரவாக பல்வேறு பிரிவினரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த நிலையில் திருநெல்வேலி கோவை மதுரை என்று பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற பாஜகவின் நிர்வாகிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்களின் மீது பெட்ரோல் கொண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கு காவல்துறையைச் சார்ந்தவர்கள் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.
இந்த பெட்ரோல் குண்டு வைத்து சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இந்த சம்பவம் குறித்து அமித்ஷாவிடம் புகார் வழங்கியிருந்தார். அதோடு தமிழக முதலமைச்சரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்திருந்தார்.
பெட்ரோல் குண்டு வைத்து சம்பவம் காரணமாக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் கிடந்த பாட்டில்களையும் அனுப்பி வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு நடுவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார். அங்கே அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் இருக்கின்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுநர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது தமிழகத்தின் தற்சமயம் பதட்டமான சூழ்நிலை நீடித்து வருகின்ற நிலையில் ஆளுநரின் இந்த டெல்லி பயணம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.