Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமணத்தன்று குடித்துவிட்டு குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட மணமகன்! மணமகள் வீட்டார் எடுத்த அதிரடி முடிவு பரிதாப நிலையில் மாப்பிள்ளை!

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா பகுதியில் ஒரு இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், திருமணம் நடைபெறுவதாக பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது.

இந்த திருமணத்திற்கு நல்ல நேரம் குறித்து பெற்றோர்கள் முடிவு செய்தார்கள். அதாவது மாலை 4 மணியளவில் நல்ல நேரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து அன்றைய தினம் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் பிரமாண்டமாக செய்யப்பட்டனர். இதற்காக மணமகன் வீட்டார் சரியான நேரத்திற்கு முன்பாகவே மண்டபத்திற்கு வந்து விட்டனர். ஆனால் மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வர கால தாமதம் உண்டானது.

இந்த நிலையில், 4 மணியில் தொடங்கிய எதிர்பார்ப்பு 8 மணி ஆகிய பின்னரும் மணமகன் வந்து சேரவில்லை இதன்காரணமாக, மணமகள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கோபமடைந்தனர்.

அதேசமயத்தில் மண்டபத்தின் ஒரு பகுதியில் மணமகன் தன்னுடைய நண்பர்களுடன் குடித்துவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்திருக்கிறார்.

நண்பர்களும் குடிபோதையில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கவனித்த மணமகள் ஆத்திரம் கொண்டார்.

இதன் பின்னர் போனால் போகட்டும் என குடித்துவிட்டு 8 மணியளவில் மண்டபத்திற்கு தன்னுடைய நண்பர்கள் புடைசூழ வந்து சேர்ந்தார்.

அவர் வந்த பிறகும் மணமகன் தோரணையிலிருந்து மட்டும் அவர் விலகவில்லை, மேலும் அவர் மணமகள் குடும்பத்தினருடன் தகராறு செய்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இவை அனைத்தையும் அமைதியாக கவனித்த மணமகளின் தந்தை மணமகனை தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டார்.

திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்த சூழ்நிலையில், திருமணத்திற்கு வந்த உறவுக்காரர் ஒருவரிடம் ஆலோசனை நடத்தி அவருக்கே தன்னுடைய மகளை மணமுடித்து வைத்திருக்கிறார், இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது.

Exit mobile version