Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக மக்களே உஷார்!! பரவி வரும் ஒட்டுண்ணி காய்ச்சல்.. சுகாதாரத் துறை கடும் எச்சரிக்கை!!

health department has warned that scrub typhus fever is spreading in Tamil Nadu

health department has warned that scrub typhus fever is spreading in Tamil Nadu

Scrub typhus fever: தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அணைத்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி இருக்கிறார். அதில், தற்போது தமிழகத்தில்  “ஓரியன்டியா சுட்சுகாமுஷி” என்ற ஒட்டுண்ணியால், ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நோய் விலங்கில் உடலில் இருக்கும் ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது.

பொதுவாக  விவசாயிகள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டி வசித்து வருபவர்கள் எந்த நோய்க்கு  அதிக அளவில் பாதித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி, தலைவலி, கருப்பு காயங்கள் உடலில் ஏற்படுவது நோயின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஐந்து நாட்கள் காய்ச்சல் இருந்தால் ஐஜிஎம் ஆன்ட்டி பாடி, எலிசா போன்ற மருத்துவ பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும் எனக் கூறி இருக்கிறார்.

இந்த நோய் தாக்கியவர்களுக்கு அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின்’ போன்ற ஆன்டி பயாடிக் மருந்துகள் கொடுக்க வேண்டும். இந்த நோய் பாதித்தவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த நோய் பரவாமல் இருக்க கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகள் உடலில் ஒட்டுண்ணிகள் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பு பராமரிப்புகள் செய்ய வேண்டும்.

மேலும் இந்த ஒட்டுண்ணி ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை தமிழக மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளார். காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் சிறுவர்கள் கர்ப்பிணிப்பெண்களுக்கும் இந்த நோய் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

Exit mobile version