Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கத்தியைப் பார்த்து பயப்படாமல் திருடனைப் பிடித்த வீரமான 15 வயது சிறுமி!

 

பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற பகுதியில் தனது செல்போனை திருடிய திருடர்களிடமிருந்து தனித்து நின்று போராடி சாதுரியமாக தனது செல்போனை மீட்ட 15 வயது சிறுமி.

பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற பகுதியில் கபூர்தலா சாலையில் 15 வயது சிறுமி சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு திருடர்கள் அந்த சிறுமியின் செல் போனை திருட முயன்று உள்ளனர்.

அப்பொழுது சற்றும் எதிர்பாராத சிறுமி அந்த திருடனை பிடித்து இழுத்து அவருடன் சண்டை போட்டுள்ளார். திருடன் சரமாரியாக தாக்கியதையும் பொருட்படுத்தாமல் சட்டையை பிடித்து இழுத்து அவனுடன் போராடியுள்ளார்.

திருடன் கத்தியை கொண்ட வெட்டிய பொழுதும் சிறுமி வீரமுடன் போராடி தனது செல்போனை மீட்டுள்ளார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு திருடனில் ஒருவனை பிடித்தனர். மற்றொருவன் இரு சக்கர வாகனத்துடன் தப்பி ஓடிவிட்டான்.

அப்போது பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு அந்த திருடனை போலீசில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

காயங்களுடன் இருந்த சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.

கத்தியை கொண்டு மிரட்டிய பொழுதும் எதற்கும் சற்றும் தளராத அந்த சிறுமி வீரமாக தனியாக நின்று போராடி தனது செல்போனை மீட்டுள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே பாராட்டும் சம்பவமாக மாறியுள்ளது.

 

 

 

 

Exit mobile version