நடிகரின் வரி விலக்கு மனுவை மேல் முறையீடு அமர்வுக்கு மாற்றிய ஹைகோர்ட்!

0
149
The High Court has shifted the actor's tax exemption petition to the appellate session!

நடிகரின் வரி விலக்கு மனுவை மேல் முறையீடு அமர்வுக்கு மாற்றிய ஹைகோர்ட்!

தமிழகத்தில் இளைய தளபதி என்றும் தற்போது தளபதி என்றும் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். மிக பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர்.  இவரின் சம்பளம் மட்டுமே லட்சங்கள் மற்றும் கோடிகணக்கில் வாங்கும் நிலையில், இவர் ஒரு புதிய தள்ளுபடி வழக்கை தொடர்ந்துள்ளார். அவரின் கடைசி படத்திற்கு 101 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

 கடந்த 2011 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்த இவர், இந்த காருக்கான அனுமதிக்கப்பட்ட வரிகளை செலுத்தி விட்டாலும், தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரியை எதிர்த்து வருகிறார். படங்களில் பல கருத்துள்ள வசனங்களை பேசி நடிக்கும் அவர் நிஜ வாழ்கையில், இப்படி உள்ளார் என்று பலர் கருது தெரிவித்த நிலையிலும், சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தும், அந்த பணத்தை கொரோனாக்கான முதல்வர் நிவாரண நிதியாக வழங்குமாறும் உத்தரவை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்து, நடிகர் விஜய், தன்னைப் பற்றிய விமர்சனத்தை எதிர்க்கும் விதமாக சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எம். சுரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மக்கள் இந்த வழக்கு குறித்து மிகுந்த ஆவலில் இருந்தனர். இதன் தீர்ப்பு குறித்து அறிந்து கொள்ள தமிழகம் முழுவதும் ஆவலாக இருந்த நிலையில், வரி தொடர்பான மேல் முறையீடுகளை விசாரணை செய்யும் அமர்வுக்கு மாற்றம் செய்ய பதிவுதுறைக்கு  நீதிபதி உத்தரவிட்டார்.

தனி நீதிபதி தீர்ப்பு நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனு ஏற்றுக் கொள்ள அனுமதி கேட்ட வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு விசாரணை செய்யும் நீதிபதிகள் துரைசாமி மற்றும்  ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.