Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர்கள் ஆறு பேருக்கு மட்டும் மரண தண்டனை விதித்து உயர் நீதிபதிகள் அதிரடி உத்தரவு !.. அதற்கான காரணம் என்ன ?  

The High Judges have ordered the death penalty for only six of them!.. What is the reason for that?

The High Judges have ordered the death penalty for only six of them!.. What is the reason for that?

வங்காளதேசத்தில் இவர்கள் ஆறு பேருக்கு மட்டும் மரண தண்டனை  விதித்து உயர் நீதிபதிகள் அதிரடி உத்தரவு !.. அதற்கான காரணம் என்ன ?

டாக்கா நகரில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதாவது 1971 ஆம்  ஆண்டு நடந்த வங்காளதேச விடுதலைப் போர்  ஒன்று நடந்தது.இந்த போரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆயுதம் தாங்கிய பலர் கூட்டாக ஒன்று திரண்டனர்.இந்த போராட்டத்தில்  ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்தனர்.

இதன்படி போர்க்குற்றம் வரலாற்றின் கருப்பு அத்தியாயமாகி இருக்கிறது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டதாக வங்காளதேசத்தில் 7 பேர் மீது போர்க் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. போர் தொடுத்தவர்கள் மீது குல்னாவிலுள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி முகமது சாகினூர் இஸ்லாம் தலைமையில் நீதிபதிகள் அபு அகமது ஜோமாதார், நீதிபதி ஹபிபுல் ஆலம் ஆகியோரைக்கொண்ட அமர்வு வழக்கை விசாரித்து வந்தது.விசாரணை முடிவில் அஜ்மத் உசேன் ஹவ்லதர், முகமது சகார் அலி சார்தார், முகமது அடியார் ரகுமான் ஷேக், முகமது மொடாசின் பில்லா, முகமது கமால் உதின் கோல்டார், முகமது நஸ்ருல் இஸ்லாம் ஆகிய 6 பேர் மீதான போர்க்குற்ற குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.

இதனை கருத்தில் கொண்ட நீதிபதிகள் அவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை விதித்து  நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் தண்டிக்கப்பட்ட 6 பேரில் முகமது நஸ்ருல் இஸ்லாம் மட்டும் இன்னும் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளார். ஆரம்பத்தில் இந்த வழக்கில் 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டாலும் விசாரணையின்போது முகமது மொஜாகார் அலி ஷேக் என்பவர் பாதியிலேயே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version