ஐந்தாவது நாளான இன்றும் தொடர்கிறது ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்!! இதற்கு என்னதான் முடிவு?

0
79
The hunger strike of the teachers continues today on the fifth day!!

ஐந்தாவது நாளான இன்றும் தொடர்கிறது ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்!! இதற்கு என்னதான் முடிவு?

ஆசிரியர் சங்கங்கள் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் “அன்பழகன் கல்வி வளாகத்தில்” ஐந்தாவது நாளான இன்று வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்ய கூறியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வுகள் நடத்தப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த உண்ணாவிரத போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.

ஐந்தாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டும், இந்த தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் போராட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் “அன்பில் மகேஷ் பொய்யாமொழி” அவர்கள் அமைச்சர் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த பேச்சுவார்த்தையில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை முன் வைக்கும் கருத்துக்கள் தான் கூறப்பட்டுள்ளதாகவும்,கூடிய விரைவில் இதற்கான சரியான முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.