குடும்பத் தகராறு மனைவியிடம் சண்டை!..கணவன் எடுத்த விபரீத முடிவு?
திருவெறும்பூர் மலைக்கோவில் அருகேவுள்ள வ.உ.சி தெருவை சேர்ந்தவர் தான் சரவணன். இவருடைய வயது 30. இவரது மனைவி பாலமணி வயது 21. இந்த இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு சஞ்சய் என்ற மகன் பிறந்தார். இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு மனைவி கோபித்துக் கொண்டு அவ்வப்போது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.
சமாதானம் செய்ய மாமனார் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்.அந்தத் தகராறு பல நாட்களாக நீடித்து வந்தது. இதனால் மனம் உடைந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் பார்த்து இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றது.