மனைவியை அருவிக்கு அழைத்துச் சென்ற கணவன்:! பின்பு நடந்த கொடூரம்!!

0
212

மனைவியை அருவிக்கு அழைத்துச் சென்ற கணவன்:! பின்பு நடந்த கொடூரம்!!

மனைவியை அருவிக்கு கூட்டிச் செல்வது போல் சென்று கொலை செய்த காதல் கணவன்!!

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியில் உள்ள ஜோதி நகர் 8-வது தெருவில் வசிக்கும் மதன் என்ற 19 வயது வாலிபரும், புழல் அருகே கதிர்வேடு ஜான்விக்டர் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற 19 வயதுடைய இளம் பெண்ணும், 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துக் கொண்டனர்.

இந்நிலையில் தமிழ்செல்வி கடந்த 25ஆம் தேதி மாயமாகியுள்ளார்.இதனைக் குறித்து தமிழ்செல்வியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில்,காவல்துறையினர் தமிழ்ச்செல்வியை குறித்து விசாரணையை மேற்கொண்டனர்.

இந்நிலையில்தான் தமிழ்ச்செல்வியும் தனது கணவருமான மதனும் ஆந்திர மாநிலத்திலுள்ள கோனே அருவிக்கு கடந்த 25 ஆம் தேதி குளிக்க சென்றதாக தகவல் கிடைத்தது.கிடைத்த தகவலின் அடிப்படையில்,ஆந்திர மாநிலம் சென்ற காவல்துறையினர்,வன காவல்துறையின் உதவியோடு அங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் படி,அருவிக்குச் செல்லும் பொழுது மதன் தமிழ்செல்வியை கூட்டி சென்றதும் பின்பு வரும்பொழுது மதன் மட்டும் வந்ததும் பதிவாகி இருந்தது.

இந்த காட்சிகளின் அடிப்படையில் தமிழ்ச் செல்வியின் காதல் கணவனான மதனை பிடித்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர் காவல்துறையினர்.அப்பொழுது தமிழ்செல்வியை அருவியில் வைத்து குத்தி விட்டு மதன் தப்பி வந்தது தெரியவந்தது.பின்பு காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்த போது ஒரு புதருக்குள்,தோல்கள் அரித்த நிலையில் சடலம் ஒன்று கிடைத்தது.அந்த சடலத்திற்கு அருகே தமிழ்செல்வியின் உடை மற்றும் காலனிகள் கிடைத்தன.சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் புத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அங்கு கிடைத்த தடயங்களை தடவியல் துறையிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.மேலும் மதனை கைது செய்த காவல்துறையினர் மனைவியை என்ன காரணத்திற்காக கொலை செய்தார் என்று அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.