Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மனைவி கருத்தரித்த பிறகு கணவன் இந்த சடங்குகளை மட்டும் செய்யவேக்கூடாது!!

ஒவ்வொரு தம்பதியரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது குழந்தை வருகையை தான்.மனைவி கருத்தரித்த பிறகு கணவன் அவளை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.மனைவி சந்தோசமாக இருந்தால் தான் வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியாக இருக்கும்.

மேலும் சாஸ்திரப்படி மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவன் சில சடங்குகளை செய்யக் கூடாது.அவை என்னென்ன என்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ள்ளது.

மனைவி கர்ப்பிணியான பிறகு கணவன் மொட்டை அடிக்கக் கூடாது.அதேபோல் மனைவி நிறைமாத கர்ப்பிணியான பிறகு கணவன் சவரம் செய்யக் கூடாது.

கர்ப்பிணி பெண்ணின் கணவர் இறந்தவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளக் கூடாது.அதேபோல் இறந்தவரின் உடலை சுமக்கக் கூடாது.

மனைவி கர்ப்பம் தரித்த பிறகு நீண்ட தூர பயணத்தை கணவன் தவிர்க்க வேண்டும்.மனைவி ஏழு மாத கர்ப்பிணியான பிறகு கணவன் புனித யாத்திரை செல்லக் கூடாது.

மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கவனம் பழுக்காத பழங்கள் மற்றும் முழுமையாக விரியாத பூக்களை பறிக்கக் கூடாது.

கர்ப்பிணி மனைவியின் கணவர் புதுமனை புகுவிழா,அடிக்கல் நாட்டு விழாவிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவன் மலையேறக் கூடாது.கர்ப்பிணி மனைவியின் கணவர் கடலில் நீராடக் கூடாது.படகு சவாரியில் ஈடுபடக் கூடாது.அதேபோல் மரம் வெட்டுதல்,ஆடு வெட்டுதல்,கோழி அறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

அதேபோல் வயலுக்கு பூச்சுக் கொல்லி மருந்து தெளித்தல் போன்றவற்றையும் மனைவியின் கர்ப்ப காலத்தில் கணவன் செய்யக் கூடாது என்று நம் சாஸ்திரம் சொல்கிறது.இந்த வழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

Exit mobile version