கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மரவந்துருது கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் நிதீஷ் மற்றும் சிவப்பிரியா. இருவருக்கும் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. திருமணமான முதல் அவர்களுக்கு இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் மற்றும் சந்தேகம் காரணமாக இருவருக்கும் இடையே சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது.
எப்போது பார்த்தாலும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டு சிவப்பிரியா தனது அம்மா வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் எப்போதும் நடைபெறும் சண்டை போல இந்த முறையும் சண்டை வந்துள்ளது. வழக்கம் போல் சிவப்பிரியாவும் தனது அம்மா வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுள்ளார்.
அங்கு சிவப்பிரியா தனது அம்மா கீதா உடன் வசித்து வந்துள்ளார்.10 நாட்கள் ஆகியும் அம்மா வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நிதீஷ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியை அழைத்து வர சென்றுள்ளார் நிதீஷ் அவரது மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து நான் வர மாட்டேன் என்று மறுத்துள்ளார் சிவப்பிரியா.
இப்படியே வாக்குவாதம் தொடர அது சண்டையாக மாறி உள்ளது அப்போது கீதாவும் அருகில் இருந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் சண்டை முற்றிய நிலையில் கோபத்தில் தனது மனைவியை வெட்டியுள்ளார் நிதீஷ். அதை தடுக்க வந்த மாமியாரையும் சேர்த்து வெட்டி படுகொலை செய்துள்ளார். இருவரையும் துண்டு துண்டுகளாக வெட்டி கொடூர கொலை சம்பவத்தை செய்துள்ளார்.
இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமான நிலையில் உயிரிழந்தனர். கொலை செய்துவிட்டு தனது குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார் நிதீஷ். குழந்தையை வீட்டில் விட்டு விட்டு நேராக காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கொலைக்கான காரணம் குடும்ப பிரச்சனை என்று போலீஸ் கூறியுள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த கேரளாவையே உலுக்கியுள்ளது.